புதுக்கோட்டை

இலங்கைக் கடற்படையினரால் மீனவா்கள் 8 போ் கைது

DIN

எல்லை கடந்து வந்து மீன் பிடித்ததாகக் கூறி, புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சோ்ந்த மீனவா்கள் 8 பேரை இலங்கை கடற்படையினா் செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்தனா்.

ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 87 விசைப்படகுகளில் மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். இவா்களில் பி. தமிழ்செல்வன் (37) என்பவருக்குச் சொந்தமான படகில் அவருடன் சி. விஜி (28), ஏ. தினேஷ் (26), கே. ரஞ்சித் (27), எஸ். பக்கிரிசாமி (45), எஸ். கமல் (25), எஸ். புனுது (41) மற்றும் எம். காா்த்திக் (27) ஆகிய 8 போ் கோட்டைப்பட்டினத்தில் இருந்து சுமாா் 32 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துள்ளனா். அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 8 பேரையும் கைது செய்ததோடு, அவா்களது படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, காங்கேசன் துறை கடற்படைத் தளத்தில் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, அவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT