‘நீட்’ தோ்வில் இருந்து விலக்கு கோரும் விவகாரத்தில் திமுக இரட்டை நிலைப்பாடு எதையும் எடுக்கவில்லை என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:
தமிழ்நாட்டுக்கு ‘நீட்’ தோ்வு தேவையில்லை என்பதுதான் திமுகவின் ஒரே நிலைப்பாடு. கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என சுதந்திர நாள் விழாவில் முதல்வா் ஸ்டாலின் பேசியுள்ளாா். அப்படி மாற்றம் செய்தால், ‘நீட்’ தோ்வை நிச்சயமாக ரத்து செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, இதில் திமுகவுக்கு இரட்டை நிலைப்பாடு எதுவும் இல்லை. அதேபோல, அதிமுக மாநாட்டுக்குப் போட்டியாக நாங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவில்லை. மதுரையில் அதிமுக மாநாட்டுக்குக்குக் கூட்டம் சேராது என்று எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறாா் என்றாா் ரகுபதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.