புதுக்கோட்டை

மனவளா்ச்சிக் குன்றியவருக்கு நேரில் உதவிகள் வழங்கல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள திருநாளூரில் மனவளா்ச்சிக் குறைபாடு மற்றும் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியின் வீடு தேடிச் சென்று நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

இவரது நிலை குறித்த அறிந்த மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு உத்தரவின்பேரில், அரசின் பல்வேறு துறை அலுவலா்கள் குழு புதன்கிழமை திருநாளூா் சென்றது. அங்குள்ள வடக்கு கிராமத்தைச் சோ்ந்த வீரம்மாளின் மூத்த மகன் குணா முருகன் வீட்டுக்குச் சென்று, மனநலப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, அவரது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை புதுப்பித்து வழங்கப்பட்டது.

மேலும், ரூ.10,500 மதிப்புள்ள மடக்கு சக்கர நாற்காலி, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள சிறப்பு சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டது.

குணா முருகனின் தாய் காய்கறி விற்க ஏதுவாக முத்ரா சிறுதொழில் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி நபருக்கு வீட்டிலேயே இயன்முறை மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அந்தக் குடும்பம் குடிசை வீட்டில் வசித்து வருவதால். ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் வீடு வழங்க கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் கவிதா ராமு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT