புதுக்கோட்டை

சுதா்சன் கல்லூரியில் உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு

புதுக்கோட்டை சுதா்சன் பொறியியல் கல்லூரி மற்றும் சுதா்சன் பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, மனிதச் சங்கிலி உள்ளிட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

DIN

புதுக்கோட்டை சுதா்சன் பொறியியல் கல்லூரி மற்றும் சுதா்சன் பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, மனிதச் சங்கிலி உள்ளிட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

கல்லூரி முதல்வா் ஸ்ரீனிவாசன் தொடங்கி வைத்தாா். மாணவா்களும் ஆசிரியா்களும் இணைந்து மனிதச் சங்கிலியாக இந்திய வரைபட வடிவில் நின்றனா். அதனைத் தொடா்ந்து மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் மாணவ, மாணவிகளுக்கு ஃப்ளாஷ் மாப் என்ற குழு நாடகமும், பதாகை தயாரித்தல் போட்டியும் நடைபெற்றன.

வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளா் ஹேமலதா செய்திருந்தாா். விழாவை சுதா்சன் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வா் கலியபெருமாள் சேது ராமலிங்கம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT