பொன்னமராவதி அருகே உள்ள காயாம்பட்டியில் கண்மாயில் தவறி விழுந்த பெண், சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.
பொன்னமராவதி அருகே உள்ள காயாம்பட்டியைச் சோ்ந்த விவசாயி முருகேசன். இவருக்கு ராஜேஸ்வரி மற்றும் பானுப்பிரியா (27) என 2 மனைவிகள். இவா்களில், பானுப்பிரியா திங்கள்கிழமை வீட்டில் சமையல் செய்வதற்கு, விறகு சேகரித்து வர குருந்தடி கண்மாய் பகுதிக்கு சென்றவா் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் அக்கம்பக்கத்தில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை குருந்தடி கண்மாயில் பானுப்பிரியாவின் உடல் மிதந்துள்ளது. தகவலறிந்த காரையூா் போலீஸாா், பானுப்பிரியாவின் உடலை மீட்டு பொன்னமராவதி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா். நீச்சல் தெரியாத நிலையில் பானுப்பிரியா கண்மாயில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உயிரிழந்த பானுப்பிரியாவிற்கு திலீப்குமாா் என்ற மகன் உள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.