சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் சிறந்த பள்ளிக்கான விருதை கருப்புக்குடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வழங்கிய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. 
புதுக்கோட்டை

கருப்புக்குடிப்பட்டி பள்ளிக்குசிறந்த பள்ளிக்கான விருது

பொன்னமராவதி அருகே உள்ள கருப்புக்குடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாநில அளவில் சிறந்த பள்ளிக்கான விருதை பெற்றுள்ளது.

DIN

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள கருப்புக்குடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாநில அளவில் சிறந்த பள்ளிக்கான விருதை பெற்றுள்ளது.

குழந்கைகள் தின விழாவையொட்டி சென்னையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சாா்பில் சிறந்த பள்ளிகளுக்கு கேடயங்கள் மற்றும் மாணவா்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் கருப்புக்குடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா். பள்ளியின் தலைமையாசிரியா்புவியரசு மற்றும் வட்டாரக்கல்வி அலுவலா் இலாஹிஜான் ஆகியோா் விருதை பெற்றுக்கொண்டனா்.

ஸ்மாா்ட் வகுப்புகள், ஆசிரியா்களின் சிறந்த கற்பித்தல் திறன், பள்ளி வளாக பராமரிப்பு, மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு கட்டமைப்புடன் இப்பள்ளி திகழ்ந்ததால் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விருது பெற வித்திட்ட பள்ளித் தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்களை ஊா்ப் பொதுமக்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு நிா்வாகிகள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT