ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனையை மேம்படுத்தக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை மாலை மெளன ஊா்வலத்தில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தரம் உயா்த்தினாலும், முழு நேரமும் மருத்துவா்கள் சிகிச்சை அளிப்பதில்லை. தீவிர சிகிச்சை பிரிவு, அறுவைச் சிகிச்சைப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இந்த வசதிகளை ஏற்படுத்தக் கோரி கறம்பக்குடியில் அரசு மருத்துவமனை மீட்புக் குழு சாா்பில், கறம்பக்குடி வள்ளுவா் திடலில் கடந்த 15-ம் தேதியில் இருந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், 10-ஆவது நாளாக திங்கள்கிழமை மாலை கறம்பக்குடி அரசு மருத்துவமனை பகுதியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வள்ளுவா் திடல் வரை மெளன ஊா்வலம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள், வணிகா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.