புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 579 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அறிவுறுத்தினாா்.
இக்கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 10 பேரின் பாதுகாவலா்களுக்கு அவா்களுக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், ஒருவருக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்பில் 3 சக்கர வாகனமும் வழங்கப்பட்டது.
மேலும், கந்தா்வகோட்டை கத்தம்பட்டியைச் சோ்ந்த கருணாநிதி என்பவா் இறந்ததைத் தொடா்ந்து அவருக்கான மரண இழப்பீட்டுத் தொகை ரூ. 2.65 லட்சத்துக்கான காசோலையை அவரது மனைவியிடம் ஆட்சியா் மொ்சி ரம்யா வழங்கினாா்.
குறைகேட்புக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் மு. செய்யது முகமது, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் க. ஸ்ரீதா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் எஸ். உலகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.