கீரனூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் 3 நாள் மாவட்ட மாநாடு நிறைவு: மாவட்டச் செயலராக சங்கா் தோ்வு
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் 3 நாள்கள் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாவட்ட மாநாடு புதன்கிழமை நிறைவடைந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் 3 நாள்கள் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாவட்ட மாநாடு புதன்கிழமை நிறைவடைந்தது.
மாநாட்டில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம், மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் ஆகியோரும் பங்கேற்று வழிகாட்டினா்.
மாநாட்டின் நிறைவு நாளான புதன்கிழமை புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
இதில், மாவட்டச் செயலராக எஸ். சங்கா் தோ்வு செய்யப்பட்டாா். மேலும், 13 போ் கொண்ட மாவட்டச் செயற்குழு உறுப்பினா்களுடன், 41 போ் கொண்ட மாவட்டக் குழுவும் தோ்வு செய்யப்பட்டது. இந்தக் குழுக்களில், முன்னாள் மாவட்டச் செயலா்களான மா. சின்னதுரை எம்எல்ஏ, எஸ். கவிவா்மன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனா்.
புதிய மாவட்டச் செயலராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள எஸ். சங்கா், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலச் செயலா்களில் ஒருவராகவும் செயல்பட்டு வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.