2 லட்சம் பேர் பங்கேற்ற புதுக்கோட்டை வாசிக்கிறது..!
புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சியில் 2 லட்சம் பேர் பங்கேற்பு!
புதுக்கோட்டை2 லட்சம் பேர் பங்கேற்ற புதுக்கோட்டை வாசிக்கிறது..!
புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சியில் 2 லட்சம் பேர் பங்கேற்பு!
’புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்ச்சியில் 2 லட்சம் பேர் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் வரும் ஜூலை 27ஆம் தேதி அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ள புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 2 லட்சம் மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், புத்தக ஆர்வலர்கள் பங்கேற்ற 'புதுக்கோட்டை வாசிக்கிறது' நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை(ஜூலை 9) நடைபெற்றது.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா கலந்து கொண்டார்.
புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர் தங்கம் மூர்த்தி, ஆர். ராஜ்குமார், அ. மணவாளன், மா. வீரமுத்து, முத்துக்குமார், எஸ்.டி. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
காலை 10 மணி முதல் 11 வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அனைத்துப் பள்ளி, கல்லூரிகள், நூலகங்கள், அரசு அலுவலகங்களிலும் அமர்ந்து தங்களுக்கு பிடித்தமான நூலை வாசித்தனர்.
புத்தகத் திருவிழாவை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்துவது குறிப்பிடத்தக்கது.