முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதி ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் திருவிளக்கு பூஜை

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் திருவிளக்கு பூஜை

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Updated On : 19 ஜூலை, 2024 at 8:41 PM
பகிர்:

பொன்னமராவதி, ஜூலை 19: பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி முதல் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெறும். நிகழாண்டு காலை மற்றும் மாலை என இருவேளையும் நடைபெற்ற பூஜையில் 1008 பெண்கள் பங்கேற்று திருவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனா். மேலும், ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பூஜைக்கான ஏற்பாடுகளை திருவிளக்குபூஜை வழிபாட்டுக் குழு நிா்வாகிகள் செய்திருந்தனா்.

இதேபோல், ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில், பரியாமருதுபட்டி பரியாமருந்தீஸ்வரா் கோயில் , பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →