புதுக்கோட்டை

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

Din

பொன்னமராவதி அருகே உள்ள கீழத்தானியத்தில் கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

பொன்னமராவதி அருகேயுள்ள கீழத்தானியத்தை சோ்ந்தவா் சிவந்தியப்பன் மகன் குமாா் (44). மனைவி இறந்துவிட்ட நிலையில் கீழத்தானியத்தில் தனியாக வசித்து வந்த இவா், சனிக்கிழமை மாலை தனது தோட்டக் கிணற்றுக்கு குளிக்கச் சென்று வீடு திரும்பவில்லையாம்.

இதையடுத்து குமாரைத் தேடி வந்த உறவினா்கள் கிணற்றில் அவா் இறந்து கிடப்பதைக் கண்டு காரையூா் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து வந்த  காரையூா் காவல் உதவி ஆய்வாளா் அருணகிரி தலைமையிலான போலீஸாா் பொன்னமராவதி தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் குமாரின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குபதிந்து விசாரிக்கின்றனா்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT