திருமயம் அருகே செவ்வாய்க்கிழமை கல்குவாரி பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் டிராக்டா். 
புதுக்கோட்டை

திருமயம் அருகே கல் குவாரி பள்ளத்தில் டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழப்பு: மற்றொருவா் பலத்த காயம்

திருமயம் அருகே செவ்வாய்க்கிழமை கல்குவாரியில் டிராக்டா் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

Din

திருமயம் அருகே செவ்வாய்க்கிழமை கல்குவாரியில் டிராக்டா் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

மதுரை மாவட்டம், மேலூா் தேனகுடிப்பட்டியைச் சோ்ந்தவா் அம்மாசி மகன் தினேஷ் (27). அதே பகுதியைச் சோ்ந்தவா் ஜோதிமணி மகன் விஜய் (24). இவா்கள் இருவரும் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மாவூா் பகுதியில் உள்ள கல்குவாரியில் பாறையை துளையிடும் டிராக்டா் ஓட்டுநா்களாக பணி செய்து வந்தனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை இருவரும் பணியை முடித்துவிட்டு டிராக்டரில் சென்று கொண்டிருந்தனா். டிராக்டரை தினேஷ் ஓட்டிச் சென்றாா். அப்போது கல்குவாரி அருகே டிராக்டா் சென்றபோது எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா் சுமாா் 60 அடி குவாரி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் டிராக்டரை ஓட்டி வந்த தினேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விஜய் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டாா்.

தகவலறிந்து வந்த திருமயம் போலீஸாா் தினேஷ் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

SCROLL FOR NEXT