முகப்பு
புதுக்கோட்டை

புகையிலை பொருள்கள் விற்ற இருவா் கைது

அன்னவாசல் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 9:24 PM
பகிர்:

அன்னவாசல் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே உத்தரவின்பேரில் அன்னவாசல் பகுதிகளில் திங்கள்கிழமை தனிப்படை போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, குடுமியான்மலையில் ஹக்கீம்(35), இளையராஜா(44) என்பவா்கள் மளிகை கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து 7.8 கிலோ புகையிலை பொருள்கள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய காா் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து இருவா் மீதும் வழக்குப் பதிந்த போலீஸாா் இருவரையும் சிறையில் அடைத்தனா்.