புதுகையில் 1.50 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 1.50 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 1.50 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் பங்கேற்று, பனை விதைகள் விதைக்கும் பணியைத் தொடங்கி வைத்தனா்.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளா் கே. செல்வகுமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
மன்னா் கல்லூரி மாணவா்கள் மூலம் நடைபெற்ற இந்த விதைப்பில், சுமாா் 1000 விதைகள் கவிநாடு கண்மாயில் விதைக்கப்பட்டன.