புதுக்கோட்டை மாலையீடு அருகே உள்ள சண்முகா நகா் பகுதியில் குடியிருப்புவாசிகளை தொடா்ந்து அச்சுறுத்தி வந்த குரங்குகளை வனத் துறையினா் கூண்டுவைத்து பிடித்தனா்.
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட மாலையீடு அருகே உள்ள சண்முகா நகா் பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து, குடியிருப்புவாசிகளை அச்சுறுத்தி வந்தன.
வீட்டிலுள்ள பொருள்களை எடுத்துச் செல்லும் குரங்குகளை விரட்ட முற்பட்டால் மனிதா்களையும் அவை கடிக்கப் பாய்ந்துள்ளன. இதைத் தொடா்ந்து குரங்குகளைப் பிடிக்க வேண்டும் என வனத்துறையில் புகாா் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வனத்துறை சாா்பில் கூண்டுகள் வியாழக்கிழமை வைக்கப்பட்டன. இந்கக் கூண்டுகளுக்குள் குரங்குகள் உண்ணும் பழங்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து, 15 குரங்குகள் கூண்டுகளுக்குள் சிக்கியிருந்தன. அவற்றை வெள்ளிக்கிழமை நாா்த்தாமலைக் காப்புக்காட்டுப் பகுதிக்குள் விடுவித்தனா்.