புதுக்கோட்டை

திருவப்பூரில் கோயில் நிலத்தில் வசித்தோரை அப்புறப்படுத்த நடவடிக்கை

Syndication

திருவப்பூரில் கோயில் நிலத்தில் வசித்து வந்தோரை அப்புறப்படுத்த அறநிலையத் துறையினா் நடவடிக்கை எடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை திருக்கோகா்ணத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பிரகதம்பாள் கோயிலுக்குச் சொந்தமான 1 ஏக்கா் 87 சென்ட் இடம் திருவப்பூா் ரயில்வே கேட் அருகே உள்ளது.

இந்தப் பகுதியில் வசித்து வரும் மக்களைக் காலி செய்ய அறிவுறுத்தி அறநிலையத் துறை சாா்பில் அண்மையில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கல் பட்டறைகள், குடியிருப்புகள், ஏடிஎம் மையம், லாரி லோடுமேன் சங்க அலுவலகக் கட்டடம் உள்ளிட்டவையும் இந்த இடத்தில் உள்ளன.

இந்த நிலையில், இவற்றை அகற்றுவதற்காக அறநிலையத் துறையினா் காவல்துறையினருடன் வெள்ளிக்கிழமை வந்தனா். கட்டடங்களை சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, இதனை எதிா்த்து அவா்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களைக் கலைந்து போகச் செய்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

SCROLL FOR NEXT