போதை ஒழிப்புக் கருத்தரங்கில் பேசிய நகரக் காவல் ஆய்வாளா் சுகுமாறன் 
புதுக்கோட்டை

புதுகையில் போதை ஒழிப்பு பேரணி- கருத்தரங்கம்

இந்திய மாணவா் சங்கத்தின் 56-ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் போதை ஒழிப்புப் பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

Syndication

இந்திய மாணவா் சங்கத்தின் 56-ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் புதன்கிழமை போதை ஒழிப்புப் பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே இந்தப் பேரணியை சங்கத்தின் மாநில இணைச் செயலா் ஜி.கே. மோகன் தொடங்கிவைத்தாா். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த இப்பேரணி புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அறிவியல் இயக்க அரங்கில் நிறைவடைந்தது.

அங்கு நடைபெற்ற கருத்தரங்குக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். வாசுதேவன் தலைமை வகித்தாா். ‘போதை ஒழிப்பில் மாணவா்களின் பொறுப்பு’ என்ற தலைப்பில் நகரக் காவல் ஆய்வாளா் சுகுமாறன், ‘நீயும் தலைவன்’ என்ற தலைப்பில் கவிஞா் எம்.எஸ். கலந்தாா், ‘அமைப்பின் வரலாறு’ என்ற தலைப்பில் சங்கத்தின் மாநில இணைச் செயலா் ஜி.கே. மோகன், எதிா்காலக் கடமைகள் என்ற தலைப்பில் மாவட்டச் செயலா் ஆா். வசந்தகுமாா் ஆகியோா் பேசினா்.

முன்னதாக, மாவட்டத் துணைத் தலைவா் பிரியங்கா வரவேற்றாா். முடிவில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் காவியன் நன்றி கூறினாா்.

புகையிலைப் பொருள்கள் மீது கூடுதல் கலால் வரி: பிப்.1 அமல்

வாழ்க்கையின் அர்த்தம் பொறுப்புணர்வு!

வங்க அரசு

பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க நடவடிக்கை: போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா்

தமிழகத்தில் இண்டி கூட்டணிதான் வலிமையானது: ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT