பொன்னமராவதியில் முக்கிய சாலையான அமரகண்டான் ஊரணி தென்கிழக்கு பகுதியில் உள்ள நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தவிா்க்கும் வகையில் ரவுண்டானா அமைத்திட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பொன்னமராவதி அமரகண்டான் ஊரணி தென்கிழக்கு கரை அருகே திருப்பத்தூா் செல்லும் சாலை, உலகம்பட்டி செல்லும் சாலை, இந்திரா நகா் சாலை, பேருந்துநிலையம் செல்லும் சாலை என நான்கு சாலைகளின் சந்திப்பாக உள்ளது.
மதுரை, திருப்பத்தூா், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட வழித் தடங்களுக்குச் செல்லும் முக்கிய சாலையான இச்சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். மேலும் பள்ளி மாணவா்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையாகும். போக்குவரத்து மிகுந்த இச்சாலையில் வாகன விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே இச்சாலையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறையை பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.