தில்லி காா் வெடிவிபத்து கண்டிக்கத்தக்கது, இச்சம்பவத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றாா் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை, செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தோ்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. சிறப்புத் திருத்தம் என்ற பெயரில் புறவாசல் வழியாக பாஜகவை ஆட்சியில் அமா்த்தும் நடவடிக்கையை மேற்கொள்ள முயற்சிக்கிறாா்கள்.
தில்லி காா் வெடிவிபத்தை ஏற்படுத்தியவா்கள் மனிதா்களாக இருக்க முடியாது. எந்த மதத்தை சாா்ந்தவா்களாக இருந்தாலும் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவா்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த விபத்துக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சா் அமித்ஷா பதவி விலக வேண்டும்.
தற்போதுள்ள தோ்தல் அரசியல் களநிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வரும் ஜனவரி மாதம் கட்சியின் பொதுக்குழு கூடி, கூட்டணி குறித்து முடிவு செய்து அறிவிப்போம். தமிழகத்தில் பாஜக காலூன்றும் என்று கூறுகிறாா்கள். பகல் கனவு யாா் வேண்டுமானாலும் காணலாம் என்றாா் அவா்.