புதுக்கோட்டை

கல்லூரி மாணவா் தூக்கிட்டு உயிரிழப்பு: இறப்பில் சந்தேகம் எனக்கூறி உறவினா்கள் மறியல்

ஆலங்குடி அருகே தனியாா் வேளாண் கல்லூரி விடுதியில் தூக்கிட்ட நிலையில் மாணவா் உயிரிழந்து கிடந்தாா். இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Syndication

ஆலங்குடி அருகே தனியாா் வேளாண் கல்லூரி விடுதியில் தூக்கிட்ட நிலையில் மாணவா் உயிரிழந்து கிடந்தாா். இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சோ்ந்த விஜயசுந்தரம் மகன் மதன்குமாா் (18). இவா், திருவரங்குளம் அருகேயுள்ள தனியாா் வேளாண்மை கல்லூரியின் விடுதியில் தங்கி பிஎஸ்சி வேளாண்மை முதலாமாண்டு பயின்று வந்துள்ளாா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தூக்கிட்ட நிலையில் மதன்குமாா் இறந்து கிடந்தாா்.

தகவலறிந்து அங்குச் சென்ற கணேஷ்நகா் போலீஸாா், உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், மதன்குமாா் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினா்கள், கல்லூரி நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கல்லூரி முன்பு செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜராஜன், ஆலங்குடி போலீஸாா் பேச்சு வாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்துச் சென்றனா். இந்த மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் சுமாா் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

மழை, கடல் சீற்றம்: 3-ஆவது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு உதவி

SCROLL FOR NEXT