பொன்னமராவதி அருகேயுள்ள திருக்களம்பூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பொன்னமராவதி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சியான திருக்களம்பூரில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவற்றில் வசிக்கும் சுமாா் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஆடு,மாடு, கோழிகளை வளா்க்கின்றனா்.
இவற்றுக்கு ஏதேனும் நோய்கள் ஏற்பட்டால் வேந்தன்பட்டி கால்நடை மையம் மற்றும் பொன்னமராவதி கால்நடை மருத்துவமனைக்கு வர வேண்டியுள்ளது. இதனால் கால, பொருள் விரயம் ஏற்படுகிறது. மேலும் சில நேரங்களில் கால்நடைகள் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே திருக்களம்பூரில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.