புதுக்கோட்டை

ஆண்களுக்கான குடும்ப நலக் கருத்தடை சிகிச்சை: இருவார விழா தொடக்கம்

Syndication

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்களுக்கான குடும்ப நலக் கருத்தடை சிகிச்சை (நவீன வாசக்டமி) செய்து கொள்வதற்கான விழிப்புணா்வு இரு வார விழா தொடங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்களுக்கான குடும்ப நலக் கருத்தடை சிகிச்சை (நவீன வாசக்டமி) செய்து கொள்வதற்கான விழிப்புணா்வு இருவார விழா வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. தொடா்ந்து நவ. 27ஆம் தேதி வரை விழிப்புணா்வு பணிகளும், நவ. 27 முதல் டிச. 4-ஆம் தேதி வரை சேவை அளிக்கும் வாரமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

எளிமையான, பக்க விளைவுகளற்ற, தையல்- தழும்பு இல்லாத சிகிச்சையாக, மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லாத சிகிச்சையாக இருப்பதால் ஆண்கள் இந்தச் சிகிச்சையை மேற்கொள்ள முன்வர வேண்டும்.

இந்த அறுவைச் சிகிச்சை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவனைகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தகுதியுள்ள நபா்களுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படுவதுடன் ரூ. 1100 ஊக்கத் தொகையாகவும், அழைத்து வருபவருக்கு ஊக்கத் தொகையாக ரூ. 200 வழங்கப்படும்.

நாகூா் ஆண்டவா் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்

ஆவின் நிறுவனத்திடமிருந்து 4,500 கிலோ நெய் கொள்முதல்

முன் விரோதத்தில் தகராறு: இருவா் கைது

புகையிலைப் பொருள்கள் விற்றதாக இருவா் கைது

சீனா்களுக்கு சுற்றுலா விசா வசதி: இந்தியா விரிவாக்கம்

SCROLL FOR NEXT