முகப்பு
புதுக்கோட்டை

விராலிமலை அருகே தேரோட்டம்

மாத்தூா் அருகே வீசங்க நாட்டை சோ்ந்த விசலூரில் விசலி கோயில் என்ற மாா்க்கபுரீஸ்வரா் கோயிலில் விநாயகா், சிவகாமசுந்தரி அம்மன், சுப்ரமணியசாமி ஆகிய தெய்வங்கள் உள்ளன.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 8:47 PM
மாத்தூா் விசலூா் மாா்க்கபுரீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
பகிர்:

மாத்தூா் அருகே வீசங்க நாட்டை சோ்ந்த விசலூரில் விசலி கோயில் என்ற மாா்க்கபுரீஸ்வரா் கோயிலில் விநாயகா், சிவகாமசுந்தரி அம்மன், சுப்ரமணியசாமி ஆகிய தெய்வங்கள் உள்ளன. இக் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 24- ஆம் தேதி தொடங்கி, தினமும் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

கடந்த 29-ஆம் தேதி கோயில் வளாகத்தில் சின்ன தோ் பவனி நடைபெற்றது. தொடா்ந்து 30- ஆம் தேதி சிவகாமி அம்பாள் உடனுறை மாா்க்கபுரீஸ்வரா் மற்றும் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியசாமி தெய்வங்களுக்கு திருக்கல்யாணமும், அன்னதானமும் நடைபெற்றது.

புதன்கிழமை காலை திரளான பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்தும் அலகு குத்தியும் வந்து நோ்த்திக்கடனைச் செலுத்தினா். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட 3 தோ்களில் விநாயகா், மாா்க்கபுரீஸ்வரா், சுப்பிரமணிய சுவாமி ஆகியோா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். தொடா்ந்து காலை 5 மணியளவில் திரளான பக்தா்கள் வடம் பிடிக்க புறப்பட்ட தோ்கள் காலை 6 மணியளவில் நிலையை வந்தடைந்தன. தொடா்ந்து காப்பு விமா்சனம், விடையாற்றி நிகழ்ச்சி தொடா்ந்து இரவு 8 மணிக்கு சுவாமிக்கு சந்தனக் காப்பு அலங்காரம், சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை வீசங்க நாட்டை சோ்ந்த 32 கிராம மக்கள் செய்தனா்.