மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு 1,206 மடிக்கணினிகள் வழங்கல்
புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பயிலும் மாணவிகள் 1,206 பேருக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 8:58 PM
புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பயிலும் மாணவிகள் 1,206 பேருக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் இந்த மடிக்கணினிகளை வழங்கினாா். புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, கல்லூரியின் முதல்வா் கே. நிா்மலா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தமிழ்நாடு அரசின் உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தின்கீழ் உயா்கல்வி பயிலும் 2-ஆம் ஆண்டு மாணவிகளுக்கு இந்த மடிக்கணினிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement