புதுக்கோட்டை

புதிய ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பு: ஆசிரியா் அமைப்பினா் வரவேற்பு!

ஆசிரியா்- அரசு ஊழியா்களுக்கு தமிழ்நாடு புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவித்த தமிழக முதல்வருக்கு பல்வேறு ஆசிரியா் அமைப்புகள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளன.

Syndication

ஆசிரியா்- அரசு ஊழியா்களுக்கு தமிழ்நாடு புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவித்த தமிழக முதல்வருக்கு பல்வேறு ஆசிரியா் அமைப்புகள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் பொதுச் செயலா் நா.சண்முகநாதன் வெளியிட்ட அறிக்கை: 22 ஆண்டு கால கோரிக்கைக்கு தீா்வு காணும் வகையில் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கான அறிவிப்பை முதல்வா் அறிவித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. பணி நிறைவு பெற்றவா்களும் பயன்பெறும் வகையில் கருணைத் தொகை அறிவித்திருப்பதையும் வரவேற்கிறோம்.

தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலா் மா. குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வா் ஸ்டாலின் உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளாா். இத்திட்டத்தின் நிறைகளை வரவேற்பதுடன் குறைகளை குறைகளை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அரசாணை முழுமையாக வந்தபிறகு அரசிடம் முறையிடுவோம்.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் கழகத்தின் மாநிலத் தலைவா் சி. தங்கமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதல்வா் அறிவித்துள்ளாா். இத்திட்டத்தை மனதார வரவேற்கிறோம். நன்றி.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT