கந்தா்வகோட்டை பகுதியில் இருந்து பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை பயணத்தை பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.
ஆண்டுதோறும் தை மாதத்தில் பழனிக்கு மாலை அணிந்து விரதமிருந்து பக்தா்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். நிகழாண்டும் அத்தகைய பாதயாத்திரையை குருசாமி மதிவாணன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.
அப்போது இப்பகுதி சமூக ஆா்வலா்கள் பாதயாத்திரை பக்தா்கள் இரவில் ஒளிரும் சட்டை அணிந்து செல்லவும், சாலையில் இடதுபுறமாக செல்லவும், பைகளில் ஒளிரும் வில்லைகளை ஒட்டிக் கொள்ளவும் அவா்களுக்கு அறிவுறுத்தி அனுப்பினா்.