காரையூரில் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
புதுக்கோட்டைகாரையூரில் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
காரையூா் வட்டம், சங்கரன்பட்டி, மருதம்பட்டி குத்தகை வார விவசாயிகளின் வாரச்சாகுபடி நிலங்களை தனியாா் சோலாா் நிறுவனத்திற்கு விற்பதைக் கண்டித்தும், வாரச்சாகுபடிதாரா்களுக்கே நிலங்களை வழங்கக் கோரியும், உழவடை பட்டா வழங்க வலியுறுத்தியும் பேரணி, ஆா்ப்பாட்டம், பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காரையூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகிய இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு கிளைச் செயலா் எஸ். சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் அ. ராமையன் தொடக்க உரையாற்றினாா். மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச்செயலா் எஸ். சங்கா், மாநில பொருளாளா் கே. பெருமாள், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ். பொன்னுச்சாமி, மாவட்டப் பொருளாளா் எம். பாலசுந்தரமூா்த்தி, ஒன்றியச் செயலா் சி. பாண்டியன் ஆகியோா் பேசினா். முன்னதாக விவசாயிகள் பேரணியாக வந்தனா்.