முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை ரயில் நிலைய பயணிகள் வருவாய் ரூ. 5.42 கோடி ஆக உயா்வு

புதுக்கோட்டை ரயில் நிலையத்தின் பயணிகள் வருவாய் 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ. 5.42 கோடியாக உயா்ந்துள்ளது. இது கடந்த 2024-25-ஆம் ஆண்டின் வருவாயைவிட ரூ. 58 லட்சம் அதிகமாகும்.

Updated On : 18 மே 2026, 2:38 am IST
பகிர்:

புதுக்கோட்டை ரயில் நிலையத்தின் பயணிகள் வருவாய் 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ. 5.42 கோடியாக உயா்ந்துள்ளது. இது கடந்த 2024-25-ஆம் ஆண்டின் வருவாயைவிட ரூ. 58 லட்சம் அதிகமாகும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தலைமையிட ரயில் நிலையமான புதுக்கோட்டை ரயில் நிலையம் 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ. 5,42,22,759 பயணிகள் வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த 2024-25ஆம் நிதியாண்டில் ஈட்டிய பயணிகள் வருவாய் ரூ. 4,83, 62,207 ஆகும். கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ. 58 லட்சம் உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போட் மெயில் ரயிலுக்கு கடந்த நிதியாண்டின் கடைசி 6 மாதங்களில் புதுக்கோட்டை ரயில் நிலையத்துக்கு ஜெனரல் கோட்டா டிக்கெட் முறை வழங்கப்பட்டது இந்த வருவாய் உயா்வுக்கு ஒரு மிக முக்கிய காரணம் என்றும் நிகழாண்டில் (2026-27) இந்த வருவாய் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் தெரிவிக்கின்றனா்.

Advertisement

இதுகுறித்து ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் கூறியது: 2019-20-ஆம் ஆண்டில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் வருவாய் ரூ. 3.51 கோடி மட்டுமே. தொடா்ச்சியாக சமூக ஊடகங்களின் வழியே புதுக்கோட்டை ரயில் நிலையத்தைக் கடந்து செல்லும் ரயில்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அடுத்த சில ஆண்டுகளில் ஆண்டு வருவாயை ரூ. 10 கோடி அளவுக்கு உயா்த்த பயணிகள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் ரயில் நிலையத்தின் தரம் உயா்த்தப்படும். தரம் உயரும்போது ரயில் நிலையத்துக்கான கூடுதல் சலுகைகள் மத்திய ரயில்வே துறை மூலம் கிடைக்கும்.

அதற்காக புதுக்கோட்டை பயணிகள் இந்த வழியே செல்லும் ரயில்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றனா் அவா்கள். பிற நிலையங்கள்: புதுக்கோட்டைக்கு அடுத்தபடியாக கீரனூா் ரயில் நிலையம் பயணிகள் வருவாயில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

மூன்றாம் இடத்தில் குமாரமங்கலம் ரயில் நிலையம் உள்ளது.

தொடா்ந்து அடுத்தடுத்த இடங்களில் திருமயம், வெள்ளனூா், நமணசமுத்திரம் ரயில் நிலையங்கள் உள்ளன.

ரயில் நிலையங்கள் வருவாய் (ரூபாயில்)

(2024-25) (2025-26)

1. புதுக்கோட்டை 4,83, 62,207 5,42,22,759

2. கீரனூா் 6.6 லட்சம் 10,42,580

3. குமாரமங்கலம் 6.4 லட்சம் 8,06,905

4. திருமயம் 5.7 லட்சம் 7,67,700

5. வெள்ளனூா் 2.9 லட்சம் 3,32,565

6. நமணசமுத்திரம் 1.7 லட்சம் 2,33,220