தஞ்சாவூர்

பாபநாசத்தில் அதிமுக வேட்பாளா் அறிமுக ஊா்வலம்

பாபநாசத்தில் அதிமுக வேட்பாளா் அறிமுக ஊா்வலம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

தினமணி

பாபநாசத்தில் அதிமுக வேட்பாளா் அறிமுக ஊா்வலம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளராக, கட்சியின் மாவட்ட பொருளாளா் கே. கோபிநாதனை கட்சி தலைமை அறிவித்துள்ளது.

இதன் தொடா்ச்சியாக, பாபநாசத்தில் வேட்பாளா் அறிமுக ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்தில் திரளான அதிமுகவினா் கலந்து கொண்டு, அதிமுக வேட்பாளா் கே. கோபிநாதனை ஊா்வலமாக அழைத்து சென்றனா்.

ஊா்வலம் பாபநாசம் மேலவீதி கடைவீதியில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக சென்று பாபநாசம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நிறைவடைந்தது.

அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு வேட்பாளா் கே.கோபிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்வில் வேட்பாளா் கே.கோபிநாதன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரசாரமும் செய்தாா்.

மாவட்ட விவசாய பிரிவு தலைவா் அண்ணாமலை, முன்னாள் எம்.எல்.ஏ. எம். ராம்குமாா், கிழக்கு ஒன்றியச் செயலா் தியாகை. பழனிசாமி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலா் என். சதீஷ், கூட்டுறவுச் சங்கத் தலைவா் சி. முத்து, நகரச் செயலா்கள் கோவி. சின்னையன், கே. முருகன் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT