முகப்பு
தஞ்சாவூர்

ரயில் பயணிகளிடம் செல்போன் திருடிய இளைஞர் கைது

ரயில் பயணிகளிடம் 12 செல்போன்களை திருடிய இளைஞரை ரயில்வே போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

Updated On : 13 மே 2013, 1:49 am IST
பகிர்:

ரயில் பயணிகளிடம் 12 செல்போன்களை திருடிய இளைஞரை ரயில்வே போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

சிதம்பரம் பாரதி தெருவைச் சேர்ந்தவர் தில்லை நடராஜன் (18). இவருக்கு தந்தையும், தாயும் இல்லை.

இந்நிலையில், தில்லை நடராஜன் கும்பகோணம் ரயில் நிலைய பிளாட்பாரத்தில்  தூங்கிக் கொணடிருந்தாராம். அப்போது, கும்பகோணம் ரயில்வே புறக்காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனபால் தலைமையிலான போலீஸார் ரயில் நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த தில்லை நடராஜனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அவர் முன்னுக்குப் பின் முரணான பதில் கூறியதில் சந்தேகமடைந்த போலீஸார், அவரை விசாரித்ததில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 12 செல்போன்களை திருடியதை ஒப்புக்கொண்டார்.

மேலும், அந்த செல்போன்களை கும்பகோணம் ஹாஜியார் தெருவில் உள்ள ஒரு தனியார் செல்போன் கடையில் விற்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார் அவர் திருடிய 12 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.