தஞ்சாவூர்

தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு 8 ஆவது மாநாடு

தினமணி

உலகத் தமிழர் பேரமைப்பின் 8 ஆவது மாநில மாநாடு தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக முனைவர் தாயம்மாள் அறவாணன் கொடியேற்றினார். கவிஞர் காசி ஆனந்தன் தலைமை வகித்து தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து, மாணவர் அரங்கம் நடைபெற்றது. பிறகு உலகத் தமிழரும், ஐ.நா.வும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் முனைவர் இராமு. மணிவண்ணன், அங்கயற்கண்ணி, பூங்குழலி ஆகியோர் பேசினர்.

பறிபோகும் தமிழர் வனங்களும், உரிமைகளும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், முனைவர் ஜெயராமன், வழக்குரைஞர் த. பானுமதி ஆகியோரும், காவிரி உரிமை என்ற தலைப்பில், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசனும், அணு உலைகள் என்ற தலைப்பில் சுப. உதயகுமாரும் பேசினர்.

மாநாட்டில் அயலகத் தமிழர் அரங்கம் என்ற கருத்தரங்கும், பேராசிரியர் அறிவரசன் எழுதிய "ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டு ஆண்டுகள்', சீ. அருண் எழுதிய "சயாம் பர்மா மரண ரயில் பாதை', கவிஞர் திருக்குமரன் எழுதிய "விழுங்கப்பட்ட விதைகள்'

ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

முனைவர் பெ. ராமலிங்கம் மாநாட்டு மலரை வெளியிட, புலவர் ரத்தினவேலன், ச. சௌந்தரபாண்டியன், சிமியோன் சேவியர்ராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

மாநாட்டு நிகழ்ச்சிகளில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர்கள் ஐயனாவரம் சி. முருகேசன், சதா. முத்துகிருஷ்ணன், மாவட்டச் செயலர் பொன். வைத்தியநாதன், மருத்துவர் பாரதிசெல்வன், புலவர் துரை. மதிவாணன், எழுத்தாளர் பொன்னிறைவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT