முகப்பு
தஞ்சாவூர்

விஷம் குடித்து இளைஞர் தற்கொலை

பாபநாசம் அருகே விஷம் குடித்து இளைஞர் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

Updated On : 30 நவம்பர் 2016, 6:40 am IST
பகிர்:

பாபநாசம் அருகே விஷம் குடித்து இளைஞர் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
பாபநாசம் காவல் சரகம், வங்காரம்பேட்டையைச் சேர்ந்தவர் சின்னதுரை மகன் தமிழரசன் (21). இவர், கீழ கபிஸ்தலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். இதை அறிந்த அந்த பெண்ணிண் உறவினர் தமிழரசனை கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த தமிழரசன் விஷம் குடித்து கபிஸ்தலம் காவிரிக் கரையில் மயங்கி கிடந்தாராம். இதைக் கண்ட அப்பகுதியினர் தமிழரசனை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசன் உயிரிழந்தார். கபிஸ்தலம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.