இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய மாநாடு
ஒரத்தநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு ஒன்றிய நிர்வாகக் குழு
ஒரத்தநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் கருணாநிதி தலைமை வகித்தார். சக்திவேல் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் திருஞானம் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். ஒன்றியச் செயலாளர் சீனி.முருகையன் வேலை அறிக்கையை வாசித்தார். ஒன்றிய துணைச் செயலாளர் அமைப்பு நிலை அறிக்கையை வாசித்தார். இதில், டெல்டா மாவட்டங்களை பாதுக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைச் செயலாளர் முத்து.உத்திராபதி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பாஸ்கர், பாலு, துரைமாணிக்கம், பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.