தஞ்சாவூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 26) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவிச் செயற்பொறியாளர் எஸ். பஞ்சநாதன் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே, மருத்துவக் கல்லூரி, ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, காவேரி நகர், எலீசா நகர், நூற்பாலை, வங்கி ஊழியர் காலனி, ஈ.பி. காலனி, மாதாகோட்டை, வல்லம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை ரோலர் பிளவர் மில், வஸ்தா சாவடி,
பிள்ளையார்பட்டி, மொன்னையம்பட்டி, ஆலக்குடி, கள்ளப்பெரம்பூர், திருமலைசமுத்திரம், சக்கரசாமந்தம், களிமேடு, மானோஜிப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.