பட்டுக்கோட்டையில் நவ. 21-இல் பயிர் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம்: விவசாயிகளுக்கு அழைப்பு
பட்டுக்கோட்டையில் நவம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள பயிர்க் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்குமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்பட்டுக்கோட்டையில் நவ. 21-இல் பயிர் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம்: விவசாயிகளுக்கு அழைப்பு
பட்டுக்கோட்டையில் நவம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள பயிர்க் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்குமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டையில் நவம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள பயிர்க் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்குமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஆர். கோவிந்தராசு, வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ஈஸ்வர் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை:
2017-18 ஆம் ஆண்டுக்கான பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் சம்பா நெல்லுக்கு செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, நடப்பு சம்பா பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 30 ஆம் தேதி கடைசி நாள்.
1 ஏக்கர் நெற்பயிருக்கான காப்பீட்டு தொகை ரூ.26,800 ஆகும். இதற்கு விவசாயிகள் 1 ஏக்கருக்கு பிரீமியமாக ரூ. 402 மட்டும் செலுத்த வேண்டும். பிரீமியத் தொகையை விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கி, கணினி பொதுச்சேவை மையம் இவற்றில் ஏதாவது ஒன்றில் செலுத்தலாம். அவ்வாறு செலுத்துவதற்குத் தேவைப்படும் ஆவணங்கள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி பாஸ்புத்தகம் ஆகியவை ஆகும்.
இவற்றில் வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் சிட்டா, அடங்கல் ஆகியவற்றை விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து எளிதாக பெறுவதற்காக நவ.21 ஆம் தேதி பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
எனவே, பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை, மதுக்கூர், சேதுபாவாசத்திரம், பேராவூரணி, திருவோணம் ஆகிய வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் முகாமில் பங்கேற்று சிட்டா, அடங்கல் ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த முகாமிலும் பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையை விவசாயிகள் செலுத்தலாம்.