முகப்பு
தஞ்சாவூர்

தீபாவளி நாளில் 16 இடங்களில் தீ

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதன்கிழமை தீபாவளி பட்டாசுகளால் 16 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதன்கிழமை தீபாவளி பட்டாசுகளால் 16 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.
மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர், பாபநாசம், பேராவூரணி, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு ஆகிய 9 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன.
இந்த நிலையங்களின் எல்லைக்குள்பட்ட பகுதியில் தீபாவளியன்று பட்டாசுகள், ராக்கெட் வெடிகளால் 16 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், கூரை வீடுகள், மாடியில் அமைக்கப்பட்ட கீற்றுக் கொட்டகைகள், 5 தென்னை மரங்கள், ஒரு பனை மரம் ஆகியவை சேதமடைந்தன. அந்தந்தப் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடங்களுக்குச் சென்று தீயணைத்தனர். தவிர, இரு இடங்களில் மின் கசிவாலும், ஒரு இடத்தில் சமையல் எரிவாயு கசிவாலும் தீ விபத்து ஏற்பட்டது. இவற்றையும் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →