முகப்பு
தஞ்சாவூர்

மரக்கிளை விழுந்து காயமடைந்தவர் சாவு

பட்டுக்கோட்டை நகரம், லெட்சத்தோப்பு கணபதி தெருவைச் சேர்ந்தவர் பி. பாலசுப்பிரமணியன் (65).

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

பட்டுக்கோட்டை நகரம், லெட்சத்தோப்பு கணபதி தெருவைச் சேர்ந்தவர் பி. பாலசுப்பிரமணியன் (65).
இவர், செப்.28-ம் தேதி காலை தனது வீட்டின் கொல்லைப்புறத்திலுள்ள குளியலறைக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராமல் அங்கிருந்த மரத்திலிருந்து பெரிய கிளை முறிந்து பாலசுப்பிரமணியன் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியன் தஞ்சையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை  காலை உயிரிழந்தார். புகாரின்பேரில் பட்டுக்கோட்டை நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →