தஞ்சாவூர்

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை: செப். 29-இல் தினமணி ஆசிரியர் திறந்து வைக்கிறார்

DIN

இலங்கைத் தலைநகரில் உள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலையை செப்டம்பர் 29-ஆம் தேதி தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் திறந்துவைக்கிறார். 
இதுகுறித்து தமிழ்த் தாய் அறக்கட்டளைப் பொதுச் செயலர் உடையார்கோயில் குணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இலங்கையில் 76 ஆண்டு கால பாரம்பரியமிக்க கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது. இச்சிலை தமிழ்த் தாய் அறக்கட்டளை சார்பில் ஆயிரம் கிலோ எடையில் மூன்றரை அடி உயரத்தில் கன்னியாகுமரி மயிலாடியில் உள்ள நல்லதாணு சிற்பக்கூடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச்சிலையை செப்டம்பர் 29-ஆம் தேதி தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் திறந்து வைக்கிறார். இவ்விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுக் கல்வித் துறைத் தலைவர் இரா. குறிஞ்சிவேந்தன் கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியுடன் திருக்குறள் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கமும் நடைபெறுகிறது. இதில், இந்திய - இலங்கைவாழ் பேராசிரியர்களும், தமிழறிஞர்களும் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரையை வாசிக்கின்றனர். 
இவ்விழாவுக்கு முன்னதாக இலங்கைத் தமிழறிஞர்கள் ஒன்றிணைந்து இந்தியக் குழுவினரை வரவேற்கும் விதமாக ஊர்வலம் நடைபெறவுள்ளது.
பின்னர், அக்டோபர் 2-ஆம் தேதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் உரையாற்றுகிறார். 
மேலும்,  இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பகுதிகளுக்குச் சென்று தமிழ் மக்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயணக் குழுவில் தமிழ்நாடு,  புதுச்சேரி,  கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த தமிழறிஞர்கள் பங்கேற்கின்றனர்.
திருக்குறள் கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு கட்டுரை வாசிக்க விரும்புபவர்களும்,  பயணக் குழுவில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்களும் தமிழ்த் தாய் அறக்கட்டளை,  மாரியம்மன்கோயில்,  தஞ்சாவூர் 613 501 என்ற முகவரியிலும், 7530002454 அல்லது 9443938797 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

SCROLL FOR NEXT