அலிவலத்தில் ஹிந்தி தேர்வு
அலிவலம் எஸ்.இ.டி.வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருச்சிராப்பள்ளி ஹிந்தி பிரசார சபா சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஹிந்தி தேர்வு நடைபெற்றது.
அலிவலம் எஸ்.இ.டி.வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருச்சிராப்பள்ளி ஹிந்தி பிரசார சபா சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஹிந்தி தேர்வு நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி ஹிந்தி பிரசார சபா சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் தேர்வில் மாணவ-மாணவியர்கள் ப்ராத்மிக், மத்யமா, ராஷ்டிராபாஷா ஆகிய தேர்வுகளை எழுதினர். இதில் அலிவலம் எஸ்.இ.டி.வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தேர்வில் சுமார் 200 மாணவ- மாணவிகள் பங்கேற்று தேர்வெழுதினர். இதன் தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் மாதம் வெளிவரும் என கூறப்படுகிறது.