முகப்பு
தஞ்சாவூர்

பட்ஜெட்டுக்கு எதிராக குடந்தையில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து சிஐடியு சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

கும்பகோணத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து சிஐடியு சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.
இதில்,  மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2018-19-க்கான பட்ஜெட்டில் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான எந்த ஒரு திட்டமும் இல்லை. இந்த பட்ஜெட் பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல்களை மனதில் வைத்தும்,  மக்களுக்கு விரோதமாகவுமே தயாரிக்கப்பட்டுள்ளது. 
குறிப்பாக, தமிழக மக்களை புறக்கணிக்கும் விதமாக, தமிழகத்துக்கு எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. தொடர்ந்து தமிழக மக்களைப் புறக்கணித்து வரும் மத்திய அரசு தற்போது பட்ஜெட்டிலும் புறக்கணித்துள்ளது என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் ஜெயபால் கண்டன உரை நிகழ்த்தினார். நிர்வாகிகள் கண்ணன்,  ஜீவபாரதி,  மணிமாறன்,  பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →