கும்பகோணத்தில் ரயில் மோதி இளைஞர் சாவு
கும்பகோணத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கும்பகோணத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கும்பகோணம் அருகே மாங்குடி வளையப்பேட்டையைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகன் ஆசைதம்பி (25). இவர் பட்டயப் படிப்பு முடித்துவிட்டு, விவசாய கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் ஆசைதம்பி சனிக்கிழமை இரவு கும்பகோணம் - தாராசுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது மயிலாடுதுறையிலிருந்து மைசூரு நோக்கிச் சென்ற விரைவு ரயில் இவர் மீது மோதியது. இதில் ஆசைதம்பி நிகழ்விடத்திலேயே இறந்தார்.இதுகுறித்து தகவலறிந்த கும்பகோணம் ரயில்வே புறக்காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனலட்சுமி தலைமையிலான போலீஸார் ஆசைதம்பியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.