தஞ்சாவூர் அருகே பெண் மர்மச்சாவு
தஞ்சாவூர் அருகே வல்லம் திருக்கானூர்பட்டி மாதாகோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர் (47).
தஞ்சாவூர் அருகே வல்லம் திருக்கானூர்பட்டி மாதாகோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர் (47). விவசாயி. இவரது மனைவி டைனஸ் மேரி (37). சித்தாள் வேலை செய்து வந்தார். இத்தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.
சனிக்கிழமை வேலைக்குச் சென்ற டைனஸ் மேரி வீடு திரும்பவில்லை. இந்நிலையில், திருக்கானூர்பட்டியில் உள்ள ஆரோக்கியசாமி என்பவரின் வயலில் அவரின் சடலம் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது. தகவலின்பேரில், ஜான் பீட்டரும், வல்லம் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். டைனஸ் மேரியின் உடலில் வேறு எந்த காயங்களும் இல்லாத நிலையில், அவரது மூக்கிலிருந்து ரத்தம் வடிந்துள்ளது. புடவை மட்டும் அலங்கோலமாகக் கிடந்துள்ளது. தனது மனைவி சாவில் மர்மம் உள்ளதாக ஜான்பீட்டர் அளித்த புகாரின்பேரில், சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து வல்லம் போலீஸார் விசாரிக்கின்றனர். பிரேதப் பரிசோதனைக்கு பிறகே விவரங்கள் தெரிய வரும் என போலீஸார் தெரிவித்தனர்.