காவிரி: இளைஞர் பெருமன்றத்தினர் போராட்டம் - 40 பேர் கைது
காவிரி மேலா ண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் கட்டடத்தை (பழைய ஆட்சியரகம்) திங்கள்கிழமை முற்றுகையிட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த 40 பேரை
காவிரி மேலா ண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் கட்டடத்தை (பழைய ஆட்சியரகம்) திங்கள்கிழமை முற்றுகையிட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். ஸ்டெர்லைட், மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும்.
ஆற்று மணல், தாது மணல் உள்ளிட்ட இயற்கை செல்வங்களின் கொள்ளையைத் தடுக்க வேண்டும். நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும் ஆகிய முழக்கங்களை எழுப்பி அண்ணா சிலையில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு பனகல் கட்டடத்துக்குச் சென்றனர். பின்னர், பனகல் கட்டட வாயிலை முற்றுகையிட்ட 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சங்கத்தின் மாவட்டச் செயலர் ஆர்.கே. செல்வக்குமார் தலைமை வகித்தார்.
மாநிலக்குழு உறுப்பினர்கள் கோ. சக்திவேல், கே. செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.