முகப்பு
தஞ்சாவூர்

காவிரி மேலாண்மை வாரியம் கோரி கையெழுத்து இயக்கம்

காவிரி மேலா ண்மை வாரியம் கோரி பழனியில் இருந்து சென்னைக்கு நடைபயணம் செல்லும் தமிழ்நாடு தெய்வீகத் தமிழ்ப் புரட்சிப் பாசறை அமைப்பினர் திங்கள்கிழமை தஞ்சாவூரில் கையெழுத்து

Updated On : 15 மே, 2018 at 4:04 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

காவிரி மேலா ண்மை வாரியம் கோரி பழனியில் இருந்து சென்னைக்கு நடைபயணம் செல்லும் தமிழ்நாடு தெய்வீகத் தமிழ்ப் புரட்சிப் பாசறை அமைப்பினர் திங்கள்கிழமை தஞ்சாவூரில் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
இந்த அமைப்பினர் பழனியில் இருந்து மே 7-ஆம் தேதி நடைபயணத்தைத் தொடங்கினர். இக்குழுவினர் திண்டுக்கல், திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு திங்கள்கிழமை காலை வந்தனர். பெரியகோயில் முன் பொதுமக்களிடம் துண்டறிக்கைகளை வழங்கி, கோரிக்கை மனுவில் கையெழுத்து பெற்றனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். கங்கை - காவிரி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். ஏரி, குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த நடைபயணத்தில் தமிழ்நாடு தெய்வீகத் தமிழ்ப் புரட்சிப் பாசறை நிறுவனர் ஆதி. மதனகோபால் தலைமையில் மாவட்டச் செயலர் பரமசிவம், தொண்டர் அணி செயலாளர் ராஜு பங்கேற்றுள்ளனர். பின்னர் இந்த அமைப்பினர் சென்னை நோக்கிப் புறப்பட்டனர். இப்பயணம் சென்னையில் ஜூன் 1-ம் தேதி நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.