விநாயகர் கோயிலை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறையிலுள்ள கலங்காமல் காத்த விநாயகர் கோயிலை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கண்டித்து, ஆன்மிக அமைப்புகள் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறையிலுள்ள கலங்காமல் காத்த விநாயகர் கோயிலை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கண்டித்து, ஆன்மிக அமைப்புகள் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கும்பகோணம் ஜோதிமலை இறைபணி சிவனடியார் திருக்கூட்டம் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் தலைமை வகித்து பேசியது:
பழைமையான இந்தக் கோயில் எண்ணற்ற பக்தர்களின் வழிபாட்டுக்குரிய தலமாக போற்றப்படுகிறது.
சாலையை விரிவுபடுத்தும் செயலை நாங்கள் எதிர்க்கவில்லை. அதை காரணம் காட்டி சிலரின் தூண்டுதல் காரணமாக கோயிலை அப்புறப்படுத்தும் செயலை இந்து ஆன்மிக அமைப்புகள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். கோயிலை அப்புறப்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்தால் கோயிலை காக்க நாங்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்த வேண்டி வரும் என்றார்.
இதில் வாய்மை அறக்கட்டைûள நிறுவனர் உமாபதி, கோயில் அறங்காவலர் மாரிமுத்து, அப்பர் சேவாலயம் நிறுவனர் பரமசிவம், கோயில் வழிபாட்டு கமிட்டி பாஸ்கரன், வீரைய்யா உள்ளிட்ட ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோயிலை அப்புறப்படுத்தும் செயலை கண்டித்து முழக்கமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.