செம்பாளூர் பனையக்குளம் ஏரி தூர்வாரும் பணி தொடக்கம்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிறுவனர் பங்காரு அடிகளாரின் 78-வது பிறந்த நாளை முன்னிட்டு, பட்டுக்கோட்டை வட்டம், செம்பாளூரில் உள்ள
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிறுவனர் பங்காரு அடிகளாரின் 78-வது பிறந்த நாளை முன்னிட்டு, பட்டுக்கோட்டை வட்டம், செம்பாளூரில் உள்ள 33 ஏக்கர் பரப்புள்ள பனையக்குளம் ஏரியை தூர்வாரும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
தொடக்க விழாவுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் பி.எஸ்.வாசன் தலைமை வகித்தார். மன்னை ரெங்கநாதன் முன்னிலை வகித்தார். ஆம்பல் அண்ணாமலையார் கோயில் மகேந்திர சுவாமிகள் குத்துவிளக்கேற்றினார். பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர் தூர்வாரும் பணியைத் தொடங்கி வைத்தார்.
உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் நிர்வாகிகள் ஆம்பல் அப்பாங்கம், கரம்பயம் ஏ.மலையய்யன், ஆலத்தூர் ஏ.ஆர்.எம்.யோகானந்தம், ஏ.எம்.ரூஸ்வெல்ட், செம்பாளூர் கலியமூர்த்தி, கால்நடை மருத்துவர் எஸ்.வீரமணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
20 நாள்களுக்குள் ரூ. 3 லட்சம் செலவில் தூர்வாரும் பணியை செய்து முடிக்க செம்பாளூர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் திட்டமிட்டுள்ளனர்.