முகப்பு
தஞ்சாவூர்

சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: முதியவர் சாவு

தஞ்சாவூரில் சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலத்தக் காயமடைந்த முதியவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை எல்.ஐ.சி. காலனி மேற்கு விரிவாக்கப்

Updated On : 22 மே, 2018 at 2:41 AM
பகிர்:

தஞ்சாவூரில் சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலத்தக் காயமடைந்த முதியவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை எல்.ஐ.சி. காலனி மேற்கு விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்தவர் ஆர். சுகுமார் (60) . இவர் மே 14-ம் தேதி பாஸ்போர்ட் அலுவலகம் அருகே இரு சக்கர வாகனத்தைத் தள்ளிக் கொண்டு சாலையைக் கடந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில், பலத்தக் காயமடைந்த சுகுமார் தனியார் மருத்துவமனையிலும், பின்னர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சுகுமார் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரித்தனர். உயிரிழந்த சுகுமார் தஞ்சாவூர் எல்.ஐ.சி. காலனி பகுதி தினமணி முகவர் ஆர். நாகராஜனின் மூத்த சகோதரர் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.