தஞ்சாவூர்

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு இறந்தவர்கள், காயமடைந்தவர்கள், பாதிக்கப்பட்ட அனைவருக்கும், சொத்துகளை இழந்தவர்களுக்கும் உரிய நிவாரணைத்தைத் தமிழக அரசு வழங்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டின்போது விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் 12 பேரின் படுகொலைக்குக் காரணமான காவல் துறை அலுவலர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும். உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் எம். ஆனந்த், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநிலச் செயலர் எம். ரவிச்சந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். கோவிந்தராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT