முகப்பு
தஞ்சாவூர்

டிராக்டர் மோதி பிளம்பர் சாவு

கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் டிராக்டர் மோதி பிளம்பர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 22 அக்டோபர், 2018 at 9:31 AM
பகிர்:

கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் டிராக்டர் மோதி பிளம்பர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் தெற்கு தெருவைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் துரைராஜ் (45), பிளம்பர். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை இவர் தனது இருசக்கர வாகனத்தில் சுவாமிமலைக்கு சென்றுவிட்டு வீடு நோக்கித் திரும்பியுள்ளார். திருப்புறம்பியம் பிரதான சாலையில் வந்தபோது, சுவாமிமலையிலிருந்து திருப்புறம்பியம் நோக்கி செங்கல் ஏற்றி வந்த டிராக்டர் துரைராஜின் வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தவர் மீது டிராக்டர் ஏறி இறங்கியது. இதில் துரைராஜ் உயிரிழந்தார். டிராக்டர் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். தகவலறிந்த சுவாமிமலை போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி  கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.